மேலூரில் கருப்புசாமி கோயில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :2566 days ago
மேலூர்: மேலூர் அருகே கண்மாய்பட்டியில் அய்யனார், பட்டத்தரசி மற்றும் கருப்புசாமி கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று (செப்.,25) நடந்தது.
இதில் கண்மாய்பட்டியில் உள்ள 6 கரையை சேர்ந்தவர்கள் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி புரவி எடுத்தனர். இரண்டு நாட்கள் நடக்கும் திருவிழாவின் முதல் நாளான நேற்று (செப்., 25ல்) குதிரை பொட்டலில் இருந்து புரவிகளை பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு சென்றனர். இதைதொடர்ந்து இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இன்று (செப்., 26) பக்தர்கள் முளைப்பாரியை சாத்தமுத்து கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.