உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ஈரோடு அருகே, ராஜா கோவிலில்மாயமான சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு

தஞ்சாவூர் ஈரோடு அருகே, ராஜா கோவிலில்மாயமான சிலைகள் கோர்ட்டில் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: ஈரோடு அருகே, ராஜா கோவிலில் காணாமல் போன, எட்டு கருங்கல் சுவாமி சிலைகளை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத் தனர்.

ஈரோடு, வெள்ளோடு கிராமத்தில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்துக்கு சொந்தமான தும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டிலும், ராஜா கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை, இடித்து வேறு இடத்தில் புதிய கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, பழமையான கோவிலை இடிக்கக்கூடாது என, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், இக்கோவிலை குறிப்பிட்டு, தமிழகம் முழுவதும், 36 ஆயிரம் கோவில்களில் திருப்பணி செய்ய நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்.

இதனால், வெள்ளோடு ராஜா கோவில் இடிக்கப்படவில்லை. இதற்கிடையில் அதே பகுதியில் புதிய கோவில் கட்டப்பட்டது. ஆனால், பழமையான கோவிலில் இருந்து, எட்டு கருங்கல் சிலைகள் மாயமாகின. இதுகுறித்து வெள்ளோடைச் சேர்ந்த தீபங்கர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ், ஐ.ஜி., பொன்மாணிக்கவேலுவிடம் புகார் செய்தார். புகாரின் படி, சிலைகளை திருடியதாக, 11 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து, ராஜாகோவிலில் இருந்த, எட்டு சிலைகளும் புதிதாக கட்டடப்பட்ட கோவிலில் இருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து போலீசார், எட்டு கற்சிலைகளையும் கைப்பற்றி, நேற்று (செப்., 25ல்) கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நீதிபதி அய்யப்பன், சிலைகளை கோவில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார். கற்சிலைகள் நேற்று வெள்ளோடு ராஜாகோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !