உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை சங்கரா ஹாலில் புரட்டாசி ஆன்மிக கண்காட்சி

சென்னை சங்கரா ஹாலில் புரட்டாசி ஆன்மிக கண்காட்சி

சென்னை: ஆழ்வார்பேட்டை, சங்கரா ஹாலில் நடந்து வரும் ஆன்மிக கண்காட்சியில், ருத்ராட்சம் விநாயகர் பார்வையாளர் களை கவர்ந்து வருகிறது.

தேசிய அளவிலான கைவினைஞர்கள் உற்பத்தியை, லாப நோக்கின்றி சந்தைப்படுத்தும் தன்னார்வ அமைப்பான, ஷன்மதி கிரியேஷன்ஸ் கண்காட்சிகளை, தொடர்ந்து நடத்தி வருகிறது. புரட்டாசி மாதத்தை ஒட்டி, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சங்கரா ஹாலில், ஆன்மிக கண்காட்சியை நேற்று (செப்., 25ல்) துவக்கியது.

இக்கண்காட்சியில், இந்தியாவிலேயே முதன் முறையாக, 9,000 ருத்ராட்சங்களால் செய்யப்பட்ட, விநாயகர் சிலை இடம் பெற்றுள்ளது. மேலும், மயூரி கல்லால் ஆன விநாயகர், பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

கண்காட்சியில் நேபாள ருத்ராட்சங்கள், ருத்ராட்ச மாலைகள், நவரத்தினங்கள், உப ரத்தினங்கள், மரகதம், மாணிக்கம் ஆகிய வற்றால் செய்யப்பட்ட சிற்பங்கள், பஞ்சலோக சிற்பங்கள் இடம் பெற்று உள்ளன.கண்காட்சியில், வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜோதிட ஆலோசனையும் வழங்கப்படுகிறது. இம்மாதம், 30ம் தேதி வரை நடக்கும் கண்காட்சிக்கு, காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !