உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் கோவில்களில் நீதிபதி ஆய்வு

மேட்டுப்பாளையம் கோவில்களில் நீதிபதி ஆய்வு

மேட்டுப்பாளையம்: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில், அடிப் படை வசதி இருக்கிறதா என, மேட்டுப்பாளையம் சப்-கோர்ட் நீதிபதி நேற்று (செப்., 25ல்) ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில், அடிப்படை வசதி இருக்கிறதா; பக்தர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக் கின்றனரா என, ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப,நீதிபதிகளுக்கு ஐகோர்ட் உத்தர விட்டது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், காரமடை அரங்கநாதர், இடுகம் பாளையம் ஆஞ்சநேயர் கோவில்களில், சப்-கோர்ட் சார்பு நீதிபதி ராமநாதன் நேற்று (செப்., 25ல்) ஆய்வு செய்தார்.

காரமடை அரங்கநாதர் கோவிலில் வரிசையில் நின்றிருந்த பக்தர்களுடன் நின்று, சுவாமியை தரிசிக்க, யாரேனும் பணம் கேட்டார்களா என விசாரித்தார். குடிநீர், கழிப்பறை வசதி இருக் கிறதா, தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என சுற்றிப்பார்த்தார்.

கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இருக்கிறதா, முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறதா என, பார்வையிட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்கு சென்ற நீதிபதி, சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம், சாப்பாடு நன்றாக உள்ளதா? அடிப்படை வசதி போதிய அளவில் இருக்கிறதா என, கேட்டறிந்தார். உண்டியல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதா என பார்த்தார்.அதன்பின், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன், இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் கோவில்களில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !