உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

அவலூர்பேட்டை : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. உற்சவர் அம்மன் வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. சிவபுராணம், கோளறு பதிகம், திருநீற்றுப்பதிகம், நமசிவாயபத்து, தேவாரம், திருவாசக துதிப்பாடல்கள், சிவநாமாவளிகள் இசையுடன் பாடினர். இரவு மகா தீபாரதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !