உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் அக்.4 ம் தேதி குரு பெயர்ச்சி விழா

விழுப்புரம் பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் அக்.4 ம் தேதி குரு பெயர்ச்சி விழா

விழுப்புரம் : பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில், அடுத்த மாதம் 4ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.

திருக்கோவிலூர் அடுத்த பையூர், ஞான குரு தட்சணாமூர்த்தி சுவாமி கோவிலில், அக். 4ம் தேதி குரு பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று இரவு 10:05 மணிக்கு குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதை தொடர்ந்து, குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.

பரனூர் ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமி தலைமை தாங்கி, சிறப்பு பூஜைகளை நடத்தி வைக்கிறார்.
முன்னதாக மாலை 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, குரு பரிகார ஹோமம், பால் அபிஷேகம், இரவு 9:15 மணிக்கு குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், 10:05 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை ஞானஸ்கந்தன், சிவராஜ் சிவாச்சார்யர்கள், கிருஷ்ணமூர்த்தி குருக்கள், மணிகண்டன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !