ஒட்டன்சத்திரம் பெரியகோட்டை கதிர்நரசிங்க கோயில் சொத்துகளை மீட்க வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரம்:பெரியகோட்டை கதிர்நரசிங்க பெருமாள் கோயிலுக்கு சொந்தமான சொத்துக் களை மீட்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொதுமக்கள் சார்பாக முன்னாள் எம்.எல்.ஏ., காளியப்பன், துணை கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு கொடுத்த மனு: ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டையில் 1,300 ஆண்டுகள் பழமையான நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது.
இதற்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது. 1,300 ஆண்டுகளுக்கு முனு ஐம்பொன்களால் செய்யப்பட்ட கதிர்நரசிங்க பெருமாள், கமலவள்ளி தாயார், கருடாழ்வார் சிலைகள் உள்ளன.
மேலும் தங்க முறம், தங்க விளக்குமாறு, வெள்ளியால் செய்யப்பட்ட கதிர் நரசிங்க பெருமாள் கவசம் மற்றும் சில நகைகள் பூஜாரிகள் வசம் இருந்தன. இந்த கோயிலுக்குரிய நிலங்களை யும், ஐம்பொன் சிலைகளையும், தங்க ஆபரணங் களையும் இந்து சமய அறநிலையத்துறை தன்வசம் எடுத்து இந்த கோயிலை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இதே கருத்தை வலிறுத்தி பொதுமக்கள் சார்பாக செல்லமுத்து என்பவரும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.