வீரபாண்டி கரபுரநாதர் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
ADDED :2644 days ago
வீரபாண்டி: மாவட்ட நீதிபதிகள், கோவில்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், சேலம் மாவட்ட கோவில்களை, நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி, மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ், குற்றவியல் முதன்மை நீதிபதி சிவஞானம், முன்சீப் நீதிமன்ற நீதிபதி தங்கமணி கணேசன் ஆகியோர், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், நேற்று (செப்., 26ல்), ஆய்வு செய்தனர்.
அப்போது, சிவாச்சாரியார் பாலசுப்ரமணியம், நீதிபதிகளின் பெயர்களை கேட்டு, சமஸ் கிருதத்தில் அர்ச்சனை செய்தார். மோகன்ராஜ், தமிழில் அர்ச்சனை செய்யத்தெரியுமா என கேட்டார். இதையடுத்து, அவர், தமிழில் அர்ச்சனை செய்தார். பின், கோவில் வரலாறு, சிற்பங் கள், வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தனர். மேலும், பூஜை முறையாக நடத்தப்படுகிறதா என, பக்தர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.