அவலூர்பேட்டை மேல்மலையனூர் கோவிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு
அவலூர்பேட்டை: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு மேற் கொண்டனர். இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களை சென்னை, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட நீதிபதிகள், கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாவட்ட கூடுதல் நீதிபதி அருணாசலம், சார்பு நீதிபதி யஷ்வந்த் ஆகியோர் நேற்று முன்தினம் (செப்., 25ல்) இரவு கூட்டாக ஆய்வு செய்தனர்.
அப்போது, உதவி ஆணையர் பிரகாஷிடம், பக்தர்களுக்கு செய்து தரப்படும் வசதிகள், கோவில் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஊஞ்சல் மண்டபம் அருகில் கூடுதலாக இரும்பு கம்பி அமைக்க அறிவுறுத்தினர். தொடர்ந்து உதவி ஆணையர் அலுவலகத்தில் ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தனர். நீதிபதிகளின் ஆய்வின் போது அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.