உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில்களில் நீதிபதி ஆய்வு

சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில்களில் நீதிபதி ஆய்வு

சென்னிமலை: சென்னிமலை காமாட்சி அம்மன் கோவில், பிராட்டி அம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில்களில், சார்பு நீதிபதி தலைமையில் திடீர் ஆய்வு நடந்தது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி, பெருந்துறை சார்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் தலைமையில், ஆய்வு நடந்தது.  கோவில்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். கோவில் வருமானம், செலவு, பூஜை முறை குறித்து கேட்டறிந்தார். சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அறநிலைய துறை பணியாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !