திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா
ADDED :2564 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா மகாசபை மாநாடு நடந்தது. சென்னை இருதயநோய் மருத்துவ நிபுணர் அழகேசன் தலைமை வகித்தார். வரவு, செலவு கணக்கு குறித்தும், கோயிலில் மூலவருக்கு தங்க கோபுரம் அமைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. 2019 பூச்சொரிதல் விழாவையொட்டி 15 ஆயிரம் பேருக்கு மதிய உணவு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்பாடுகளை சிவசக்தி நாகராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனை செய்தனர்.