உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் பைரவர் சிலை கண்டெடுப்பு

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் பைரவர் சிலை கண்டெடுப்பு

ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் கண்டெடுத்த பைரவர் சுவாமி சிலையை, இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிடப் பட்டுள்ளதா, என போலீசார் விசாரிக்கின்றனர். மண்டபம் தெற்கு கடற்கரையில் 2 அடி உயரத்தில் கருங்கல்லிலான பைரவர் சிலை ஒதுங்கி கிடந்தது. சிலையை அப்பகுதி மீனவர்கள் மீட்டு கரையில் வைத்தனர். இலங்கைக்கு நாட்டு படகில் கடத்திச் செல்ல பைரவர் சிலை திருடப்பட்டு நடுவழியில் மத்திய, மாநில பாதுகாப்பு படையினரை கண்டதும் பயந்து கடத்தல்காரர்கள் கடலில் வீசி தப்பி இருக்கலாம், என உளவுத்துறை போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !