ஓசூர் ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில் ஷீரடி சாய்பாபா பல்லக்கு உற்சவம்
ADDED :2578 days ago
ஓசூர்: ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில், ஷீரடி சாய்பாபா பல்லக்கு உற்சவம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் இருந்து, தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில், ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி கோவில் உள்ளது. ஷீரடி சாய்பாபா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (செப்., 28ல்) காலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், 5:15 மணிக்கு வேதபாராயணம், நகர சங்கீர்தனம், 7:00 மணிக்கு கொடியேற்றுதல் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், நடந்தது. இரவு, 7:00 மணிக்கு ஊஞ்சல் சேவை, சாய் பஜனை நடந்தது. ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், பால் பண்ணை உரிமையாளர் நாராயணரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.