உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரையில் நவராத்திரியை அலங்கரிக்கும் மண் கொலு பொம்மைகள்

மானாமதுரையில் நவராத்திரியை அலங்கரிக்கும் மண் கொலு பொம்மைகள்

மானாமதுரை: மானாமதுரையில் ஆண்டு தோறும் சீசனிற்கு தகுந்தாற் போல் மண்ணால் பொருட்களை செய்து விற்பனை செய்வதுண்டு. விநாயகர் சிலைகள், சாமி சிலைகள் மற்றும் கொலு பொம்மைகள் என பல்வேறு  பொருட்களை கலைநயத்துடன் தயாரிப்பதால் தமிழக த்தின் பல பகுதிகளிலிருந்தும் வியாபாரிகள் மானாமதுரை வந்து பொருட்களை
வாங்கிச் செல்கின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் விற்பனைக்கு இங்கிருந்து பொருட்கள் அனுப்பப்படுகிறது.

அடுத்த மாதம் நடைபெற உள்ள நவராத்திரி விழாவிற்காக சுவாமி சிலைகள், திருப்பதி பிரம்மோற்ஸவ சிலைகள், தலைவர்கள் சிலைகள், பறவைகள் மற்றும் விலங்கு பொம்மை கள், ஆண்டாள் பொம்மைகள் என கொலுவில் வைக்கப்படும் அனைத்து பொம்மைகளும் சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தயார் செய்யப்பட்டு விலை ரூ. 50 லிருந்து தரத்திற்கேற்ப ரூ. 4500 வரை மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தேவைபடுவோர் 04574 269057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !