உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
நேற்று விடுமுறை(ஞாயிறு) தினம் யொட்டி ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகம், வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இவர்கள் கோயிலில் அக்னி தீர்த்த கடல் நீராடி விட்டு, கோயிலுக்குள் 22 தீர்த்தங்களை நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினார்கள். பின் கோயில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் வெகு நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று வழக்கத்தை விட சுவாமி சன்னதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 5 ஆயிரம் மேலான சுற்றுலா பயணிகள் கடல் அழகு கண்டு ரசித்தனர். சிலர் போலீசார் தடையை மீறி கடலில் குளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !