ஈரோடு கபாலீஸ்வரர் வகையறா கோவில்களில் நீதிபதிகள் ஆய்வு
ADDED :2630 days ago
ஈரோடு: ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் வகையறா கோவில்களில், அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, நீதிபதிகள் ஆய்வு செய்தனர். ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் மற்றும் கஸ்தூரி அரங்க நாதர் கோவிலில், மாவட்ட தலைமை நீதிபதி உமா மகேஸ்வரி, சக்தி விநாயகர் கோவிலில் நீதிபதி தீபிகா, அப்பர்சாமி மடத்தில், நீதிபதி குலசேகரன் ஆய்வு செய்தனர். கழிப்பிட வசதி, குடிநீர், தீயணைப்பு சிலிண்டர், கேமரா மற்றும் வாகன நிறுத்தம் உள்ளதா? என, ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அறநிலைய அதிகாரிகள், ஊழியர்கள் உடனிருந்தனர்.