உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பசுக்கள் கணக்கெடுப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பசுக்கள் கணக்கெடுப்பு

மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோசாலையில் பசுக்கள் கணக்கெடுப்பை கலெக்டர் நடராஜன் துவக்கினார்.தேசிய கால்நடை கணக்கெடுப்பை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இப்பணி இக்கோயிலில் துவங்கியது. இணை கமிஷனர் நடராஜன்  வரவேற்றார். கால்நடை மண்டல இணை இயக்குனர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் நடராஜன் பேசியதாவது: கால்நடை பின்புலம் கொண்டவர்களால் கணக்கெடுப்பு நடக்கிறது. வீடு தேடி சென்று கால்நடைகள், கோழிகள், செல்லப்பிராணிகள், மீன்வளம்,  விவசாய உபகரணங்கள், கால்நடைகளின் இனம், வயது, பயன்பாடு போன்ற விவரங்கள் கம்ப்யூட்டரில் சேகரிக்கப்படும். சரிபார்ப்புக்கு பின் பதிவேற்றம் செய்யப்படும். கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படும். இதன்படி தேவையான கால்நடை  மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றார். கால்நடை மருத்துவ குழு உட்பட 30 பேர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !