அஷ்டமியும் நவமியும்
ADDED :2602 days ago
திதி தேவதைகள் அஷ்டமியும் நவமியும் ஒரு சமயம் வைகுந்தம் சென்றார்கள் அங்கு பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீமந் நாராயணனிடம், “சுவாமி, மக்கள் எல்லோரும் எங்களை சிறிதும் விரும்பாமல் ஆகாத திதிகள் என வெறுத்து ஒதுக்கி வைக்கின்றனர். இந்த நிலை மாறி, நாங்கள் இருவரும் எல்லோராலும் போற்றப்பட வேண்டும். அதற்கு எங்களுக்கு அருள்புரியுங்கள்!” என்று கூறி வருந்தி பகவானை வேண்டி நின்றனர். அதன்படி திருமால் நவமி திதியில் ‘ராமாவதாரம்’ செய்து ராமநவாமி கொண்டாட வைத்தார். கிருஷ்ண பரமாத்வாக அஷ்டமி திதியில் அவதரித்து, ‘கோகுலாஷ்டமி’ கொண்டாட வைத்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.