நவகிரகங்களும் நிவேதனங்களும்
ADDED :2601 days ago
நவகிரகங்களை கோயில்களில் 9 முறை வலம் வந்து பணிந்து துயர்களிலிருந்து விடுதலை பெறுவது வழக்கம். அத்துடன், விசேஷ காலங்களில் கீழ்க்காணும் நிவேதனங்களைச் சமர்ப்பித்து வழிபட்டால் சகல நலன்களும் கைகூடும். சூரியனுக்குச் சர்க்கரைப் பொங்கலும், சந்திரனுக்கு பால் பாயசமும், செவ்வாய்க்கு வெண்பொங்கலும், புதனுக்கு புளியோதரையும், குருவுக்கு தயிர் சாதமும், சுக்கிரனுக்கு நெய் சேர்த்த பொங்கலும், சனி பகவானுக்கு எள் சாதமும், ராகுவுக்கு உளுந்து சாதமும், கேதுவுக்கு சித்ரான்னமும் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.