விக்கிரவாண்டியில் குருபெயர்ச்சி மகாபூஜை
ADDED :2661 days ago
விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி புவனேஸ்வரர் உடனுறை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி மகாபூஜை நடந்தது.குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கும், நவகிரகங்களுக்கும் பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் குரு பகவானுக்கு மஞ்சளாடை, கொண்டைக் கடலை அலங்காரத்துடன் மகா தீப ஆராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை சங்கர் குருக்கள் செய்தார். விக்கிர வாண்டி மற்றும் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.