ராமேஸ்வரத்தில் குருபெயர்ச்சி யாகம்
ADDED :2559 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அமிர்தானந்தமயி மடத்தில் நேற்று (அக்., 4ல்)சுவாமி அஜயாமிருதா தலைமையில் குருபெயர்ச்சி யாகம், பூஜை நடந்தது.
சத்சங்கம், மானஸ பூஜை, யாகபூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் நிர்வாகி சுடலை உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான ஈஸ்வரி அம்மன் கோயிலில் சிவமணி தலைமையில் குருபெயர்ச்சி யாக பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை புரோகிதர் உமாசங்கர், வேத விற்பன்னர்கள் செய்தனர்.