உள்ளூர் செய்திகள்

கர்ம வழி

மஜ்ஜத்வம்பஸி யாது மேருசிகரம் சத்ரூந் ஜயத்வாஹவே
வாணிஜ்யம் க்ருஷிஸேவநாதிஸகலா வித்யா: கலா: சிக்ஷதாம்
ஆகாசம் விபுலம் ப்ரயாது ககவத்க்ருத்வா ப்ரயத்நம் வரம்
நாபாவ்யம் பவதீஹ பாக்யவசதோ பாவ்யஸ்ய நாச: குத:

நீரிலே மூழ்கினாலும், மேருமலையின் சிகரத்திற்கே சென்றாலும்; யுத்தத்தில் எதிரிகளை வெற்றிக் கொண்டாலும் வாணிபம், விவசாயம், வேலை சம்பந்தமான எல்லா வற்றிலும் அடிப்படை அம்சம் பெற்றிருந்தாலும்; விடாமுயற்சியால் பறவையைபோல் பரந்து ஆகாயத்திலே பறந்தாலும்; எது எப்படி செய்தாலும் இவ்வுலகத்தில் மனிதர்களுக்கு நடக்கக் கூடாது என்றிருப்பவை நடக்காது. ஆதிகாலத்தில் செய்த புண்ணியத்தினால் நடக்கவேண்டியவை நடந்தேத் தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !