முதுகுளத்தூரில் வடலூர் வள்ளலார் பிறந்த தினம்
ADDED :2561 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் வடலூர் வள்ளலாரின் 196 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வள்ளலார் அறக்கட்டளை சார்பில் பேருந்து நிலையத்தில் அறக்கட்டளை நிர்வாகி மருத்துவர் தயவுகதி ஓம்சரவணபவ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இயற்கை உணவான தேன், தினைமாவு, மோர், பழங்கள் போன்ற உணவுகளை வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வள்ளலார் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.