ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம்
ADDED :2559 days ago
ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றம் நேற்று (அக்.,5ல்) மாலை 5:45 மணிக்கு நவநாள் திருப்பலியுடன் நடந்தது. சிவகங்கை மறைமாவட்ட முதன்மை செயலாளர் ஏ.பாக்கியநாதன் மறையுரையாற்றினார்.
வேளாங்கண்ணி மாதா அன்பியம், மறைக்கல்வி மாணவர்கள், தூய ஜோசப் துவக்கப்பள்ளியினர் பங்கேற்றனர். திருவிழா நாட்களில் தினமும், ஜெபமாலை சர்ச்சை சுற்றி அன்னையின் திருவுருவப் பவனியும், நவநாள் திருப்பலியும் நடக்கிறது. அக்.13 ல் திருவிழா திருப்பலியும், தேர்ப்பவனியும் நடக்கிறது. சிவகங்ககை மறை மாவட்ட ஆயர் ஜே.சூசைமாணிக்கம் மறையுரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை பாதிரியார் என்.அருள்ஆனந்த் செய்திருந்தார்.