உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி சித்தானந்தா கோவிலில் குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி சித்தானந்தா கோவிலில் குரு பெயர்ச்சி விழா

புதுச்சேரி: குரு சித்தானந்தா கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.கருவடிக்குப்பம் ஸ்ரீமத் குரு சித்தானந்த கோவிலில் நடந்த குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (அக்.,4ல்) மாலை கலச பிரதிஷ்டையும், இரவு 7:00 மணியளவில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அதனை தொடர்ந்து 8:30 மணியளவில் குருவிற்கு பால், பழம் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் அபிஷேகமும், இரவு 10:05 மணியளவில் மகா தீபாராதனையும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், தேவசேனாதிபதி குருக்கள் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்தனர்.





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !