மதுரை சின்மயா மிஷன் சார்பில் சேதுபதி பள்ளியில் பகவத் கீதை போட்டி
ADDED :2555 days ago
மதுரை:மதுரை சின்மயா மிஷன் சார்பில் சேதுபதி பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கான பகவத் கீதை ஒப்புவிக்கும் போட்டி நடந்தது.
42 பள்ளிகளை சேர்ந்த எல்.கே.ஜி., முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 12 ஆயிரத்து 293 குழந்தைகள் பங்கேற்றனர். இறுதி சுற்றில் முதல் மூன்று இடத்தை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப் பட்டது. பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. அபராஜிதா தலைவர் பரத் கிருஷ்ண சங்கர், கனரா வங்கி பொது மேலாளர் பரமசிவம், யுனைடெட் இந்திய இன்ஸ் சூரன்ஸ் தலைமை மண்டல மேலாளர் ரங்கராஜன், லட்சுமி விலாஸ் வங்கி துணைத் தலைவர் தாமோதரன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மிஷன் சுவாமி சிவயோகானந்தா, செயலாளர் கோபால்சாமி, துணைத் தலைவர் திலகர் செய்தனர்.