கோவையில் வரும் 10ல் சரஸ்வதி நாமஜெப வேள்வி
ADDED :2555 days ago
கோவை: தர்ம ரக் ஷண சமிதி சார்பில், கோவையில் சரஸ்வதி நாமஜெப வேள்வி வரும் 10ல் துவங்கி 19 வரை தொடர்ந்து நடக்கிறது.ஒப்பணக்காரவீதி, மில்ரோடு சந்திப்பில் உள்ள ஸ்ரீ அத்திவிநாயகர் திருக்கோவிலில் இந்த வேள்வி நடைபெறுகிறது. பங்கேற்க அனுமதி இலவசம். இது குறித்து தகவல் வேண்டுவோர், 98430 55329, 98422 28538, ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை, தர்மரக்ஷண சமிதி செய்துள்ளது.