கோவையில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :2555 days ago
கோவை:ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எளிய தமிழில் அனைவருக்கும் கீதை என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவு, ராம்நகர் ராமர் கோவிலில் நேற்று நடந்தது.பரமனின் கீதையை பைந்தமிழில் பாமரனும் உணரும் வகையில், கடையநல்லூர் விஷ்வ வாரகரி சம்ஸ்தான் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் பேருரையாற்றினார். திரளான பக்தர்கள் பங்கேற்று, ஆன்மிக உரையில் பரவசமடைந்தனர்.
ரகுநாத்தாஸ் பேசுகையில்,நாம் ஒருவருக்கு உதவி செய்து விட்டு அதற்காக, அவரிடம் மற்றொரு உதவியை எதிர்பார்க்க கூடாது. அவ்வாறு எதிர்பார்க்காமல் இருப்பதே தெய்வீக குணம். மனிதன் இரண்டு காரணங்களால், தூக்கமில்லாமல் தவிக்கிறான். அதிக பணம் சேர்த்துக் கொண்டு, திருடன் வந்து விடுவானோ என்று பயப்படுபவனுக்கும், அதிக கவலை உடையவனு க்கும் தூக்கம் வராது. கவலையை மறக்க, தெய்வத்திடம் உண்மையாக இருக்க வேண்டும், என்றார்.