மதுரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை
ADDED :2598 days ago
மதுரை:மதுரை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலையின் பாரம்பரியம் காக்க கூட்டுப் பிரார்த்தனை நடந்தது.
சம்மட்டிபுரம் ராஜ் நகர், பீ.பீ.குளம் சொக்கநாதபுரம் மாரியம்மன் கோயில், பரவை மயூரநாதர் கோயில், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் மற்றும் கள்ளந்திரி ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்க தலைவர் விஸ்வநாதன், செயலாளர் பாண்டியராஜன், உதவித் தலைவர் மனோகரன், இணைச் செயலாளர்கள் சின்னப்பாண்டி, செல்வராஜ், கண்காணிப்பாளர் ஜெயராமன், பி.ஆர்.ஓ., மணி செய்தனர்.