உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா புஷ்கரம் ரத யாத்திரைக்கு திண்டிவனத்தில் வரவேற்பு

மகா புஷ்கரம் ரத யாத்திரைக்கு திண்டிவனத்தில் வரவேற்பு

திண்டிவனம்:திண்டிவனத்திற்கு வந்திருந்த மகா புஷ்கரம் விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு, பக்தர்கள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு, வி.எச்.பி.,சார்பில், 12 ராசிக்களுக்கான நதிகளின் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேபோல் காஞ்சிபுரத்திலிருந்து நேற்று (அக்., 8ல்) காலை புறப்பட்ட ரதயாத்திரை, திண்டிவனம் சந்தைமேட்டிற்கு நேற்று (அக்., 8ல்) மாலை 6.30 மணிக்கு வந்தது.

பின்னர் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்த ரதயாத்திரை, திண்டிவனம் திந்திரிணீஸ் வரர் கோவிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் சார்பில் ரதயாத்திரைக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதில், வி.எச்.பி. மாவட்ட நிர்வாகிகள் நாமதேவன், ராமதாஸ், நாகராஜன், ரத யாத்திரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கணேஷ்காந்தி, நம்மாழ்வார்சபை வீரவேங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் ரதயாத்திரை விக்கிரவாண்டி வழியாக விழுப்புரம் நோக்கி சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !