உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்தவீட்டு மெகா விருந்து

பிறந்தவீட்டு மெகா விருந்து

காளி என்றதும் நினைவுக்கு வரும் ஊர் கோல்கத்தா. ஹூக்ளி நதியின்  கரையில் கோல்கத்தா  காளி கோயில் உள்ளது. நவராத்திரியை முன்னிட்டு ஒன்பது நாள் ’துர்காபூஜை’  ’காளிபூஜை’ நடக்கும்.  வீடுகளிலும் கோயில் போல மண்ணாலான துர்காதேவி சிலைகளை செய்வர்.   துர்க்கையைத் தங்களின் மகளாகக் கருதும் இவர்கள்,  புகுந்த வீடான இமயமலையில் இருந்து தாய் வீடான மேற்கு வங்காளத்திற்கு அம்பிகை வருவதாக எண்ணி மகிழ்கின்றனர்.  காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் பழங்கள், இனிப்புகள், பொங்கல், கிச்சடி என மெகாவிருந்து படைப்பர். பூஜையின் கடைசி நாள் பிறந்த வீட்டு சீதனத்துடன், வெற்றிலை, பாக்கு கொடுத்து துர்க்கையை வழியனுப்பும் நிகழ்ச்சி நடக்கும். இறுதியாக நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !