பெண்குழந்தை பெருஞ்செல்வம்
ADDED :2669 days ago
பெண்குழந்தைகள் பிறந்தால் வருத்தமுடன் வளர்க்கும் நிலை உள்ளது. ஆனால் நபிகள் நாயகம் மூலம் அவர்களின் மேன்மையை தெரிந்து கொள்ளுங்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அந்த வீட்டிற்கு இறைவன் வானவர்களை அனுப்புகிறான். குடும்பத்தினர் அனைவரின் மனதிலும் அமைதி உண்டாக அவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள். பின்னர் குழந்தையை தங்களின் சிறகுகளால் வருடி அணைக்கிறார்கள். அதன் தலை மீது தடவிக் கொடுத்து, ’இக்குழந்தையை வளர்ப்பவருக்கு இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்’ என வாழ்த்துகின்றனர். இனியாவது பெண்குழந்தைகளை பெருஞ்செல்வமாக போற்றி பாதுகாப்போம்.