ரெகுநாதபுரம் மேலவலசையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், மண்டல பூஜை
ADDED :2558 days ago
ரெகுநாதபுரம்:ரெகுநாதபுரம் மேலவலசையில் வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த ஆக.24ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பெண்கள் நெய்விளக் கேற்றி, பஜனை பாடல்களை பாடினர். சுற்றுப் பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.