உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (அக்.,8ல்) இரவு புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

அதனையொட்டி அன்று காலை வினாயகர், பெரியாழி அம்மன், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !