உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனமரத்துப்பட்டி மஹா புஷ்கர ரத யாத்திரைக்கு வரவேற்பு

பனமரத்துப்பட்டி மஹா புஷ்கர ரத யாத்திரைக்கு வரவேற்பு

பனமரத்துப்பட்டி: விஷ்வ இந்து பரிஷத் சார்பில், தாமிரபரணி மஹா புஷ்கர ரதயாத்திரை, சேலம் - நாமக்கல் சாலையிலுள்ள, பொய்மான் கரடு ராமர் கோவிலுக்கு, நேற்று (அக்.,9ல்) வந்தது.
அங்கு, கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சுபாகரன், கிருஷ்ணசாமி, பா.ஜ., மாவட்ட நிர்வாகி சின்ராஜ் உள்பட மக்கள், வரவேற்பு அளித்து, துங்கபத்திரா நதி தீர்த்த கலசம், அம்மனை வழிபட்டனர். நேற்றிரவு, 8:00 மணிக்கு, மேட்டூர், ஜலகண்டாபுரம் வழியாக, ரத யாத்திரை, ஓமலூர் வந்தது. பஸ் ஸ்டாண்ட் எதிரே, மக்கள் வரவேற்று தரிசனம் செய்தனர். அதன் முன், சிறுவர்கள், சிலம்பாட்டம், நடனமாடியபடி, ஊர்வலமாக சென்றனர். பின், சேலம் நோக்கி புறப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !