ஐயப்ப பக்தர்கள் பஜனை கோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
ADDED :2553 days ago
பொள்ளாச்சி:சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொள்ளாச்சியில் ஐயப்ப சேவா சமாஜம் அமைப்பு சார்பில் பஜனை நடத்தப்பட்டது. கேரளா சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் காந்தி சிலை அருகே, ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தி பஜனை நடந்தது. இதில், சங்க உறுப்பினர்கள், பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். உச்சநீதி மன்றம், தீர்ப்பில் மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, வலியுறுத்தினர். மேலும், ஐயப்ப பக்தி பாடல்கள் பாடி பஜனையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த பஜனை போராட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.