கொடுமுடியில் வள்ளலார் குருபூஜை
ADDED :2552 days ago
கொடுமுடி: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் அருகில் உள்ள, அறுபத்து மூவர் மடத்தில் அருட்பிரகாச வள்ளலாரின், 76வது ஆண்டு குரு பூஜை விழா, நேற்று நடந்தது. அருட்பெருஞ்ஜோதி வழிபாடும், மவுன சிவாச்சல அடிகளாரின் "மரணமில்லா பெருவாழ்வு” என்னும் தலைப்பில் சொற்பொழிவும் நடந்தது. நல்லாசிரியர் விருது பெற்ற, கணபதிபாளையம் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன், சாலையில் கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை, போலீசாரிடம் ஒப்படைத்த, ஈரோடு பள்ளி மாணவன் முகம்மது யாசீன் ஆகியோரை பாராட்டி, சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவில் தீபாராதனை நடந்தது.