உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 20ல் அம்புசேர்வை திருவிழா

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் 20ல் அம்புசேர்வை திருவிழா

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி - அவினாசி சாலை, கோவில்புதூரில், கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ண தேவராயர் காலத்தில், கட்டப்பட்ட இக்கோவில், 600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. இங்கு, விஜயதசமியை முன்னிட்டு, அம்புசேர்வை திருவிழா, விமர்சையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு, அக்.,19ல் இரவு 1:00 மணிக்கு, கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, குதிரை, கருடன், ஆஞ்சநேயர் மற்றும் சப்பரம் ஆகிய நான்கு வாகனங்களில் சுவாமி அழைப்புடன், அம்புசேர்வை விழா துவங்குகிறது. அக்.,20 காலை 6:00 மணிக்கு, புன்செய்புளியம்பட்டி, பிளேக் மாரியம்மன் கோவிலை அடைகிறது. அங்கு, குதிரை வாகனத்தில், கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளி, அம்புசேர்வை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கவாள சேவை, மாலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு பாவாடை பூஜை நடக்கிறது. அன்றிரவு 8:00 மணிக்கு, சுவாமி வாகனங்கள் மீண்டும், கரிவரதராஜ பெருமாள் கோவிலை அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !