மஹா புஷ்கர விழா: 700 போலீசார் பயணம்
ADDED :2612 days ago
சேலம்: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில், தாமிரபரணி மஹாபுஷ்கர விழா, 144 ஆண்டுகளுக்கு பின், நாளை தொடங்குகிறது. அதையொட்டி, நாடு முழுவதுமிருந்து இரண்டு கோடி பேர், தாமிரபரணி நதியில் புனித நீராடவுள்ளதாக, மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில், 110 படித்துறைகளில் நீராட உள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும், போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்படுகின்றனர். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து தலா, 150 பேர், சேலம் மாநகரில், 100 பேர் என, 700 பேர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பாதுகாப்பு பணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.