உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி விழா துவக்கம்: களை கட்டிய கோவில்கள்

நவராத்திரி விழா துவக்கம்: களை கட்டிய கோவில்கள்

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, அவிநாசி சாலையில், கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், நவராத்திரியின் போது, கொலு வைத்து, பூஜை செய்வது வழக்கம். இதன்படி, நேற்று, கோவில் வளாகத்தில், விநாயகர், சரஸ்வதி, துர்கா முதலான சுவாமி மற்றும் பல வகை அழகு பொம்மைகள் கொலுவில் வைத்து, பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன், பிளேக் மாரியம்மன் கோவில்களில், கொலு பொம்மைகள் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. பிளேக் மாரியம்மன் கோவிலில், கும்மிப்பாடல் நிகழ்ச்சி மற்றும் பஜனை நடந்தது. இதனால் கோவில்கள் களை கட்டின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !