உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக.. வத்தலக்குண்டு ஐயப்பன் கோயிலில் தீபமேந்தி பெண்கள் முழக்கம்
வத்தலக்குண்டு:சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, பொறுமை காப்போம், பொறுமை காப்போம், ஐயப்பனின் பெருமை காப்போம் என வத்தலக்குண்டு பெண்கள் ஐயப்பன் கோயிலில் தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 50 வயதிற்குட்பட்ட பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பெண்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு
தெரிவித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.வத்தலக்குண்டு கலியுகவரதன் ஐயப்பன் கோயிலில் பெண்கள் கைகளில் தீபம் ஏந்தி கோஷமிட்டு, 10 முதல் 50
வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்லமாட்டோம் என உறுதிமொழி எடுத்தனர். அவர்கள் கூறுகையில்,ஐயப்பனின் மகிமையை அறிந்த நாங்கள் உள்ளூரில் உள்ள ஐயப்பன்
கோயிலுக்கே செல்ல மாட்டோம். சபரிமலையில் தவக்கோலத்தில் உள்ள ஐயப்பன் கோயிலு க்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற பாரம்பரிய முறையை தீர்ப்பு மூலம் மாற்றலாம். ஆனால் மனதார செயல்படுத்த முடியாது என்றனர்.நிர்வாகக்குழு தலைவர் சரவணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்டுவதில்லை, சீராய்வு மனு தாக்கல் செய்யாத கேரள, மத்திய அரசுகளை கண்டிப்பது. தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது