ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் உறுதிமொழி எடுத்த பெண்கள்
ADDED :2553 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நேற்று (அக்., 12ல்) பெண்கள் சபரிமலையின் புனிதம் காப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. வல்லபை ஐயப்பன் கோயில் தலைமை குருசாமிமோகன்சுவாமி பேசுகையில், 10 வயது முதல் 50
வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, இங்குள்ள கோயிலில் இருமுடி கட்டுவது இல்லை.
மனதை ஒருநிலைப்படுத்தி 41 நாட்கள்முறையாக விரதம் இருந்து, லாகிரி வஸ்துகளை உபயோகிக்காத ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமே இருமுடி கட்டப்படும். சுற்றுவட்டார கிராமங் களை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பெண்கள் பங்கேற்று உறுதிமொழியுடன் கூட்டுப் பிரார்த்தனையும் செய்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பில் பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்றார்.