/
கோயில்கள் செய்திகள் / கண்டாச்சிபுரம் அடுத்த கருவாட்சி மதுரா லட்சுமிபுரத்தில் பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
கண்டாச்சிபுரம் அடுத்த கருவாட்சி மதுரா லட்சுமிபுரத்தில் பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2553 days ago
கண்டாச்சிபுரம்:-கண்டாச்சிபுரம் அடுத்த கருவாட்சி மதுரா லட்சுமிபுரத்தில் பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கண்டாச்சிபுரம் அடுத்த கருவாட்சி மதுரா லட்சுமிபுரத்தில்
வலம்புரி விநாயகர் மற்றும் பழனி ஆண்டவர் கோவில் புதிதாக கட்டப்பட்டு நேற்று (அக்.,12ல்) கும்பாபிேஷகம் நடந்தது.
இதற்கான பூஜை நேற்று முன்தினம் (அக்.,11ல்) துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று (அக்.,12ல்) காலை காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணா ஹூதியை தொடர்ந்து காலை 9:30 மணிக்கு புனித நீர் கலசம் புறப்பாடாகி வலம்புரி விநாயகர் மற்றும் பழனி ஆண்டவர் கோவில் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காலை 10:30 மணிக்கு மூலவர்கள் வலம்புரி விநாயகர் மற்றும் பழனி ஆண்டவருக்கு மகா தீபாராதனை நடந்தது.