உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் நவராத்திரி மூன்றாம் நாளில் பசுவதீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு சேஷ சயன அலங்காரம்

கரூர் நவராத்திரி மூன்றாம் நாளில் பசுவதீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு சேஷ சயன அலங்காரம்

கரூர்: நவராத்தி விழாவை முன்னிட்டு, பசுவதீஸ்வரர் கோவிலில் கொலு வைத்து, தினமும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். கரூர், கல்யாணபசுபதீஸ்வரர் கோவில்
வளாகத்திலுள்ள மண்டபத்தில், தசாவதாரம், புராண கதை, கல்யாண வைபவங்கள், அனைத்து சுவாமி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், மரச் சொப்பு விளையாட்டுப் பொருட்கள் என, பல வித பொம்மைகளை வைத்து, கொலு வைக்கப்பட்டுள்ளது. கோவிலில், அலங்காரவள்ளி தாயாருக்கு தினமும் பலவித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

முதல் நாளில் அம்மனுக்கு சிவதபசு அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (அக்.,12ல்) முருகன் அலங்காரம், நேற்று (அக்., 13ல்) மாலை அம்மனுக்கு, சேஷ சயன அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நவராத்திரி முழுவதும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !