ஈரோடு பூர்ண யோக நிலையத்தில் நவராத்திரி விழா
ADDED :2555 days ago
ஈரோடு: ஈரோடு, பிரப் ரோடு அருகே உள்ள கைகோளன் தோட்டம் பகுதியில் உள்ள பூர்ண யோக நிலையத்தில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இங்கு, சமஸ்கிருதம் மற்றும் ஆன்மிகம் தொடர்பாக, படித்து வருவோர் மற்றும் பக்தர்கள் சார்பில், தினமும் லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம், நாமாவளி அர்ச்சனை நடக்கிறது. கடந்த, பத்து முதல் வரும், 19 வரை நடக்கிறது. இந்த நிலையத்தில், பகவத்கீதா, வேதாந்த வகுப்புகளும், சமஸ்கிருத மொழி வகுப்பும் முறை யாக நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகளில் பங்கேற்க, 90039 34344, 73394 21896 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.