ப.வேலூர் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா
ADDED :2615 days ago
ப.வேலூர்: ப.வேலூர், பேட்டை புதுமாரியம்மன் கோவிலில், 44வது ஆண்டு நவராத்திரி விழா நடக்கிறது. ப.வேலூர், பேட்டை புதுமாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா
சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, 44வது ஆண்டாக, நவராத்திரி திருவிழா, கடந்த, 10ல் தொடங்கியது. அதற்காக, கோவில் பிரகாரத்தில் பல்வேறு வகையான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் நடக்கிறது. வரும், 18 இரவு ஊஞ்சல் உற்சவம், மறு நாள் மாலை, 5:00 மணியளவில் அம்மன் ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.