உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் நாளை (அக்.,14ல்) கருடசேவை: சேலத்தில் 2 டன் பூக்கள் தொடுப்பு

திருமலையில் நாளை (அக்.,14ல்) கருடசேவை: சேலத்தில் 2 டன் பூக்கள் தொடுப்பு

சேலம்: திருப்பதி திருமலையில் நடக்கும் கருடசேவைக்கு, சேலத்திலிருந்து, 2 டன் பூக்கள் தொடுத்து, அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பதி திருமலையில், அக்., 10 முதல், 18 வரை, ஸ்ரீவாரி மஹா நவராத்திரி பிரம்மோத்சவம் நடந்து வருகிறது. இதில், நாளை (அக்., 14ல்) கருடசேவை உற்சவம் நடக்கிறது.

இதற்காக, திருமலை திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா அறக்கட்டளை சார்பில், பூக்கள் தொடுக்கும் வைபவம், நேற்று (அக்., 12ல்), சேலம், குகை, கருங்கல்பட்டி ஆனந்தநிலையம் திருமண மண்டபத்தில் நடந்தது.

இங்கு சாமந்தி, மேரிகோல்டு, ரோஜா உள்ளிட்ட வாசனை மலர்கள், இரண்டு டன் அளவுக்கு, தொடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கோவிந்தநாமம் கூறியபடியே பூக்களை தொடுத்தனர். மாலைகளாக தொடுக்கப்பட்ட பூக்கள் அனைத்தும், தனி வாகனங்கள் மூலம், திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, டிரஸ்டி பாலசுப்ரமணியம் தலைமையில், நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !