திருமங்கலம் ஐயப்ப பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2630 days ago
திருமங்கலம்: சபரிமலையின் பாரம்பரியத்தையும், ஆகம விதிகளையும் பாதுகாக்க வலியுறுத்தி திருமங்கலத்தில் ஐயப்ப பக்தர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினர்.
ஒருங்கிணைப்பாளர் திருமலைச்சாமி, பக்தர்கள் சங்க நிர்வாகிகள் கண்ணன், சுகுமார், ராஜகோபால் தலைமையில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன்கோயிலில் இருந்து ஊர்வலம் புறப்பட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சபரிமலை பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என கோஷங்களையும் எழுப்பினர். முக்கிய ரோடுகள் வழியாக ஊர்வலம் நடந்தது.