பாப்பாரப்பட்டி கோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு: ஐயப்ப பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2568 days ago
பாப்பாரப்பட்டி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், நேற்று, ஐயப்ப சுவாமி பக்தர்கள், குருசாமிகள், பெண்கள் ஊர்வலமாக சென்றனர். நெசவாளர் நகர் விநாயகர் கோவிலிருந்து துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, ஐயப்பன் கோவில் நிறைவடைந்தது. தொடர்ந்து, கூட்டு பிரார்த்தனை நடந்தது.