உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எலச்சிபாளையம் பெரியமணலி நாகேஸ்வரர் கோவிலில் வரும் 24ல் அன்னாபிஷேக விழா

எலச்சிபாளையம் பெரியமணலி நாகேஸ்வரர் கோவிலில் வரும் 24ல் அன்னாபிஷேக விழா

எலச்சிபாளையம்: பெரியமணலி நாகேஸ்வரர் சுவாமி கோவிலில் வரும், 24ல், அன்னாபிஷேக விழா நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியில் உள்ள நாகேஸ்வரர், வேணுகோபாலசுவாமி கோவிலில் வரும், 24ல் அன்னாபிஷேக விழா நடக்க இருப்பதையொட்டி, 7:30க்கு விநாயகர் வழிபாடு, 9:30 மணிக்கு தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நடக்கிறது. தொடர்ந்து, மங்கள இசை, திருமுறைபாராயணம், சொற்பொழிவு, வேதபாராயணம் நடக்கிறது.

மாலை, 5:00 மணிக்கு நாகேஸ்வரர் சுவாமி அன்னஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார். பின்னர், அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. 6:30 மணிக்கு சிவகாமிஅம்மை உடனமர் நாகேஸ்வர சுவாமி, சிறப்பு அலங்காரத்துடன் திருவீதிஉலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !